அனைத்து தரப்பினரும்  வாக்களித்து தான் மோடி முதலமைச்சராக பதவி வகிக்கிறார் குஜராத் முதலவர் நரேந்திர மோடியை மறைமுகமாக தாக்கிய பேசிய பிகார் முதலவர் நிதீஷ் குமாருக்கு அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க சேர்ந்த கிரி ராஜ்சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது வரும் 2014 மக்களவை பொது தேர்தலில் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக்க வேண்டும் என நான் சொல்கிறேன் ; தைரியம் இருந்தால் நிதீஷ்குமார் பதவியிலிருந்து என்னை நீக்கட்டும்.

குடியரசு தலைவர் தேர்தலுக்கான மும்முரத்தில்_அனைவரும் இருக்கும் போது 2014 மக்களவை பொதுத்தேர்தல் குறித்து நிதீஷ் குமார் இப்போது பேசுவது ஏன் ? மேகமே இல்லாமல் மழை எங்கிருந்து பொழிகிறது? அனைத்து தரப்பினரும் வாக்களித்துத் தான் நரேந்திர மோடி முதலமைச்சராக பதவி வகிக்கிறார். எப்படி அவரை வகுப்பு வாதி என நிதீஷ் முத்திரைகுத்துகிறார்’ என கேள்வி எழுப்பினர்

Leave a Reply