பெட்ரோல், விலைவாசி உயர்வை கண்டிக்கும் விதமாக பா.ஜ  சார்பில் சிறை  நிரப்பும்  போராட்டம்பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் விலைவாசி உயர்வை கண்டிக்கும் விதமாக பாரதிய ஜனதா சார்பில் சிறைநிரப்பும் போராட்டம் இன்று தொடங்கியது . இதில் பாரதிய ஜனதா முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.

மத்திய அரசு பெட்ரோல் விலையை வரலாறு கானாத அளவுக்கு பன் மடங்கு உயர்த்தி உள்ளது. இதற்கு நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது . பெட்ரோல் விலை உயர்வினால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. இதனை கண்டிக்கும் விதமாக பாரதிய ஜனதா கடந்த ஜூன் 7ம் தேதி பொதுவேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்தநிலையில் இன்று சிறைநிரப்பும் போராட்டத்தை தொடங்கியுள்ளது . பாரதிய ஜனதா தேசிய, மற்றும் அந்தந்த மாநில தலைவர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

Leave a Reply