நரேந்திர மோடியின் படங்களை ஏந்தி ஆதரவு  கோஷங்களை  எழுப்பிய பீகார்   பா.ஜ.க வினர் பெட்ரோல் விலை உயர்வு , விலைவாசி உயர்வு உள்ளிட்ட மத்திய அரசின் தவறானபொருளாதார கொள்கைகளை கண்டித்து பா.ஜ.க சார்பில் நாடுமுழுவதும் போராட்டங்கள் இன்று நடத்தப்பட்டன. இதில் பீகாரில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட அம் மாநில பா.ஜ.க தொண்டர்கள், நரேந்திர மோடியின் படங்களை ஏந்தி, அவருக்கு

ஆதரவான கோஷங்களை எழுப்பி மோடிக்கு தங்கள் ஆதரவை காட்டினர் .

சமீபத்தில் ‘2014-ல் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் பிரதமர் வேட்ப்பாளர் மதசார்பற்றவராக இருக்க வேண்டும்’ எனக் கூறினார். அவர் நரேந்திர மோடியையே இவ்வாறு மறைமுகமாக குறிப்பிடுகிறார் என கூறப்பட்டது

இந்நிலையில் குஜராத்தை கடந்தும் பா.ஜ.க தொண்டர்களிடையே மோடிக்கு பலமான_ஆதரவு இருப்பதை நிதிஷ் குமாருக்கு உணர்த்தவே தாங்கள்_இவ்வாறு நடந்து கொண்டதாக, அந்த தொண்டர்கள் தெரிவித்தனர். மோடியை பிரதமர்வேட்பாளராக அறிவிக்க நிதிஷ் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், தனது மாநிலத்திலேயே மோடிக்கு ஆதரவு வழுத்து வருவதை சற்று நிதிஷ் குமார்கவனித்தல் நன்று.

Leave a Reply