ஆண்டாளை கீழ்த்தரமாக சித்தரிக்கும்  மனோன் மணீயம் சுந்தரனார் பல்கலை பாடப்பிரிவு திருநெல்வேலி மனோன் மணீயம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் தற்போது மாற்றபட்டுள்ள இளங்கலை தமிழ்புத்தகத்தில் நோன்பு என்ற தலைப்பில் தமிழ் பண்பாட்டின் சிகரமாக விளங்கும் ஆண்டாளை பற்றி கீழ்த்தரமாக சித்தரிக்க பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இளங்கலை முதலாம் ஆண்டு பாடதிட்டத்தில், தமிழ்மொழி பாடப்பிரிவில் கொடுக்கப்பட்ட புத்தகத்தில் இத்தகைய காழ்ப்புணர்வு கட்டுரை பல்கலை கழக பாடத்திட்ட குழுவினரால் சேர்க்கப்பட்டுள்ளது . இதில், ஆண்டாள் தேவ தாசியாகவும், அவர் பெரியாழ்வாருக்கு திருட்டுதனமாக பிறந்ததாகவும், ஆண்டாளின் மீது மன்னன் வல்லப தேவன் மோகம்கொண்டு பரிசுகளை அனுப்பியதாகவும் ஒரு கற்பனை கதையை புனைந்துள்ளனர் . மேலும் ஆபாச வர்ணனைகளும் இந்தபாடத்திட்டத்தில் இடம் பெற்றிருப்பதாக தெரிய வருகிறது.

திக, திமுக ஊன்றிய விஷவிதைகள் இன்று அங்கொன்றும் இங்கொன்றும்மாக தலைவிரித்து ஆடுகின்றன. அவற்றை முளையி லேயே பிடுங்கி எரியவேண்டும். தமிழில் எளியமுறையில் விழிப்புணர்வை ஊட்டும் திருப்பாவையை எழுதிய ஆண்டாளை அவதூறாக எழுதியவர் ஒரு பேராசிரிரா என சந்திகிக்க தோன்றுகிறது ,இதில் அரசு உடனே தலையிடவேண்டும்.

Leave a Reply