தில்லி ,மும்பை நகரங்களுக்கு ஏவுகணை தாக்குதலைத் தடுக்க தானியங்கி திட்டம்  எதிரி நாட்டின் ஏவுகணைகளை தானாகவே நடுவானில் வழி மறித்து தாக்ககூடிய பாதுகாப்பு அரனை தில்லி ,மும்பை பெரு நகரங்களில் நிறுவ மத்திய பாதுகாப்புத்துறை திட்டமிட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதல் முறையாக இத்தகைய_பாதுகாப்பு அரண்,

தில்லி மற்றும் மும்பைக்குத்தான் வழங்கபடுகிறது . போர் தந்திரம் சார்ந்த இந்த திட்டத்தை செயல்படுத்து வதற்க்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டது . ரேடார்’ கருவிகளை பொருத்தவேண்டிய இடங்கள், எதிரி ஏவுகணையை நடு வானில் தாக்கி அழிப்பதற்கு ஏற்றவகையில் ஏவுகணைகளை நிறுவவேண்டிய பகுதிகள் குறித்து திட்டம் செயல்படுத்தப்படும் போது முடிவுசெய்யப்படும். முற்றிலுமாக தானியங்கி முறையில் செயல்படும் இந்தப்பாதுகாப்பு தொழில் நுட்பம், எதிரி ஏவுகணைகளை கண்டால் யாருடைய கட்டளையும் இன்றி தானாகவே தாக்கி அழித்து விடும்.

Tags:

Leave a Reply