மராத்வாடா என்ற மராட்டிய பகுதி ஒரு காலத்தில் ஆன்மீக தலங்களுக்கு மிகவும் புகழ்பெற்று இருந்தது. அது தற்போது தீவிரவாதிகளின் கூடாரமாக மாறிவருகிறது. கடந்த 6 வருடமாக இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்கள் மராத்வாடாவில் இருந்தே திட்டமிடபட்டுள்ளன.

இங்குள்ளவர்களே அத்தாக்குதளுக்கு மூளையாக செயல் பட்டுள்ளனர். இப் பகுதி தீவிரவாதிகளை தேர்வுசெய்து அவர்களை தயார்படுத்தும் இடமாக மாறி உள்ளது. இதனால் மராத்வாடா புதியபாகிஸ்தானாக உருவெடுத்துள்ளது.

இதுமத்திய அரசின் கையாலாகாத தனத்தையே காட்டுவதாக உள்ளது . மத்திய உள் துறை அமைச்சகமும் உளவுத் துறை அமைப்புகளும் செயலற்றுப்போய் இருப்பதை காட்டுகிறது. மராத்வாட தீவிரவாதிகளின் கூடாரமாக_மாறியிருப்பது மஹாராஷ்டிராவிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே பேராபத்தை விளைவிக்கும்”என சிவசேனாவின் பத்திரிகையான சாமனா’வின் தலையங்கத்தில் பால் தாக்கரே குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply