எங்கள்  ஆதரவு பிரணாப்புக்கே  தவிர  ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு அல்ல தங்கள் ஆதரவு பிரணாப் முகர்ஜிக்கு மட்டுமே தவிர நாட்டை அழிவின் விளிம்பிற்கே கொண்டு சென்றுள்ள சோனியாகாந்தி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு_அல்ல என ஐக்கிய ஜனதா தளகட்சி தலைவர் சரத் யாதவ் தெரிவித்துள்ளார் .

தேசிய ஜனநாயக_கூடடணியின் ஒருங்கிணை பாளரான சரத்யாதவ் இது குறித்து மேலும் தெரிவித்ததாவது; ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக_கூட்டணி கட்சிகளிடையே மாற்றுகருத்துக்கள் இருக்கலாம் இருப்பினும் நாங்கள் அவர்களுடன் நாங்கள் நெருங்கிய தொடர்பில்தான் இருக்கிறோம். தங்களது ஆதரவு ஜனாதிபதி வேட்பாளரான_ பிரணாப்பிற்கே தவிர, நாட்டை அழிவின் விளிம்புக்கே கொண்டுசெல்லும் தவறான கொள்கைகளை உடைய ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் அல்ல என தெரிவித்தார் .

Leave a Reply