ஆதர்ஷ் குடியிருப்பு ஊழலில் குற்றம்சுமத்தப்பட்டுள்ள முன்னாள் மகாராஷ்டிர முதலவர் அஷோக்சவான், விலாஸ்ராவ் தேஷ்முக்கே இது அனைத்துக்கும் பொறுப்பு என தெரிவித்துள்ளார்.

நீதி மன்றத்தில் ஆஜரான அஷோக் சவான், மும்பை நகர் மற்றும்

அதன் புற நகர் பகுதிகள் முதலவரின் கட்டுப்பாட்டில் வருகின்றன. எனவே இது குறித்து முழுமையாக அப்போது முதலவராக இருந்த விலாஸ்ராவ் தேஷ்முக்தான் அறிவார் என தெரிவித்துள்ளார் .

ஏற்க்கனவே இந்த வழக்கு குறித்த விசாரணைக்கு நேரில் ஆஜரான விலாஸ்ராவ் தேஷ்முக், அப்போது வருவாய்த்துறை அமைச்சராக இருந்த அஷோக் சவானுக்குதான் அனைத்தும் தெரியும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:

Leave a Reply