நாகப்பட்டிணத்தில் பாரதிய ஜனதா மாநில பொதுக் குழு உறுப்பினர் புகழேந்தி (53), இன்று காலை மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் , இந்த தமிழகம் எங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புகழேந்தி அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் கடற் கரைக்கு வாக்கிங்சென்றார். பிறகு வீடு திரும்பி கொண்டிருந்தார். நாகை எல்ஐசி. அருகே வந்த போது ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் 4 பேர் கொண்ட கும்பல் புகழேந்தியை வழிமறித்து சரமாரியாக அரி வாளால் வெட்டியது. இதில் ரத்தவெள்ளத்தில் புகழேந்தி அதே இடத்திலேயே பரிதாபமா க இறந்தார். பிறகு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும்_போலீஸ் சூப்பிரண்டு ராமர் சம்பவ இடத்துக்கு வந்தார் விசாரணை மேற்கொண்டார் . போலீஸ் மோப்பநாய் வரவழைக்கபட்டது. அது கொலை நடந்த இடத்திலிருந்து 1 கிமீ தூரம் உள்ள அக்கரைகுளம் வரை சென்றது.

காவல்துறையினர் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர் . கொலையாளிகளை உடனடியாக கைதுசெய்ய கோரி நாகை மாவட்ட பா.ஜ.க தலைவர் வரதராஜன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது. இதனால் நாகையில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது .

கொலை செய்யப்பட்ட புகழேந்திக்கு, மனைவியும், 1 மகள், 2 மகன்கள் உள்ளனர். இவர் மிகசிறந்த சுறுசுறுப்பான நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply