நாகையில் பாரதிய ஜனதா மாநில செயற் குழு உறுப்பினர் புகழேந்தி மர்மநபர்களால் வெட்டி படு கொலை செய்யப்பட்டார். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த பாரதிய ஜனதா மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகைக்கு வந்தார்.

அப்போது இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியதாவது; அரசியல் கொலைகள் தமிழகத்தில் வர வர அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக அதிகாலையில் நடை‌ பயணம் செய்யும்போது இது மாதிரி கொலைகள் தொடர்ந்து நடந் தேறி வருகிறது. இந்தவிஷயத்தில் தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

உண்மையான குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். இந்த விஷயத்தில் விரிவான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் தமிழகம் சுடுகாடாகிவிடும். அதற்கு இடம் கொடுக்காமால் தமிழக அரசு விரைந்து செயல்படவேண்டும் என கூறினார்.

Leave a Reply