பிரணாப் முகர்ஜியின்  ராஜிநாமா கடிதம் போலியானது ; அனந்த் குமார்   இந்திய புள்ளியியல் கழக தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக பிரணாப் முகர்ஜி அனுப்பி உள்ள ராஜிநாமா கடிதம் போலியானது என பா.ஜ.க குற்றம்சுமத்தியுள்ளது.

இது குறித்து பா.ஜ.க. பொதுச்செயலர் அனந்த் குமார்  

செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது .

பிரணாப் ராஜிநாமா 100 சதவிகித ம் போலியானது இப்படிபட்ட ஒருவர் இந்தியாவின் உயர்பதவிக்குப் போட்டியிடுவது துரதிருஷ்டமானது. தேர்தல் ஆணையத்திடம் இருந்து நீதியை எதிர் பார்க்கிறோம்.

தேர்தல் அதிகாரியின் சான்றளிக்கபட்ட கடிதத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். அதன் பிறகே சட்டரீதியிலான நடவடிக்கையை பற்றி யோசிப்போம் என்றார் அனந்த்குமார்.

பிரணாபின் வேட்புமனுவைக் காப்பாற்றுவதற் காக, சங்மாவின் குற்றச்சாட்டுக்கு பிறகே ராஜிநாமா கடிதம் எழுதப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன

Leave a Reply