சரத்பவார் நம்பிக்கைக்குரிய நபர் அல்ல என எச்சரித்தேன் ; அர்ஜுன் சிங்    தேசியவாத காங்கிரசின் தலைவர் சரத்பவார் நம்பிக்கைக்குரிய நபர் அல்ல என ராஜீவ் காந்தியிடம் தான் எச்சரித்ததாக மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் அர்ஜுன் சிங் தனது சுயசரிதையில் தெரிவித்துள்ளார் .

அர்ஜுன்சிங் கடந்த 2011-ம் ஆண்டில் காலமாகிவிட்டார். இந்த

நிலையில் அவர் எழுதிய சுயசரிதை விரைவில் வெளிவர உள்ளது. அதில் சரத்பவார் நம்பகத்துக்குறிய நபரல்ல என 1986-ம் ஆண்டிலேயே ராஜீவ்காந்தியிடம் எச்சரித்தேன். இருப்பினும் அப்போது ராஜீவ்காந்தி அவரை கட்சியில் மீண்டும் சேர்த்துக்கொண்டார். 13 ஆண்டுகள் கழித்து சரத்பவார் காங்கிரசை உடைத்து தேசியவாத காங்கிரசை உருவாக்கினார். தனது எச்சரிக்கை அப்போது உண்மையானதாக அர்ஜுன்சிங் தெரிவித்துள்ளார் .

Leave a Reply