இந்தி  நடிகை  லைலாகான்  கொலை செய்யப்பட்டாரா?தாவூத் இப்ராகிமின் கூட்டாளியை சமிபத்தில் திருமணம் செய்த நடிகை லைலாகான் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிரபல இந்தி நடிகை லைலா கான்.பாகிஸ்தானில் பிறந்தவர்,

மும்பையில் தங்கி இந்தி படங்களில் நடித்துவந்தார்.சில மாதங்களுக்கு முன்தான் லைலாகான் திடீர் என திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் லைலா கானை திருமணம் செய்தவர் மும்பை குண்டுவெடிப்பில் தேடப்படும் தாவூத் இப்ராகிமின் நெருங்கிய_கூட்டாளி என தெரியவந்தது.இதனால் லைலா கானிடம் மும்பை தீவிரவாத தடுப்புபிரிவு காவல்துறை விசாரணை நடத்த முடிவுசெய்து இருந்தது .

அதனை தொடர்ந்து திடீர் என லைலா கானும்,அவரது பெற்றோர் மற்றும் சகோதரியும் மாயமாகி விட்டனர் .அவர்கள் கொலைசெய்யப்பட்டு விட்டதாக மும்பையில் வதந்தி பரவியது.ஆனால் மும்பை காவல்துறையினரால் அதை உறுதிசெய்ய முடியவில்லை.

இந்நிலையில் லைலாகான் உயிருடன் இல்லை.கொலைசெய்யப்பட்டது உண்மை என காஷ்மீர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

லைலாகான், சகோதரி, தாயார், வளர்ப்பு தந்தை ஆகிய நான்கு பேரும் மும்பையில் கொலைசெய்யபட்டதாக தங்களுக்கு நம்ப தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளதாக காஷ்மீர் காவல்துறையை சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தனது நெருங்கிய_கூட்டாளியை லைலா கான் திருமணம்செய்ததால் தங்களை காட்டிக்கொடுத்து விடுவாரோ என பயத்தில் தாவூத் இப்ராகிம் கும்பல் அவர்களை கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply