இலங்கை வீரர்களுக்கு பயிற்சி வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போல் உள்ளது தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது :-

இலங்கை தமிழர்களை அழிக்கும்_பணியில் ஈடுபட்டுள்ள சிங்கள அரசுக்கு காங்கிரஸ்- திமுக. கூட்டணி அரசு தொடர்ந்து

உறுதுணையாக இருந்துவருகிறது. 2008-2009-ம் ஆண்டுகளில் தமிழர்களின் மீது போர் தொடுத்த போது சிங்கள அரசுக்கு அனைத்து உதவி களையும் செய்து இலங்கை தமிழர்களின் படு கொலைக்கு மத்திய அரசு துணைபோனது.

இந்தநேரத்தில் வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போல் இலங்கை விமானப் படை வீரர்களுக்கு இந்தியாவில்_அதுவும் குறிப்பாக தமிழ் நாட்டில் பயிற்சி தருவது கண்டனத்துக் குரியது. இலங்கை தமிழர்களை அழிக்க தமிழ்மண்ணிலேயே பயிற்சி தரப்படுவது ஏற்கமுடியாதது.

இது தமிழனின் தன் மானத்தை பரிசோதிப்பது இலங்கை விமானப் படை வீரர்களுக்கு தரும் பயிற்சிகள் தமிழர்களை அழிப்பதற்காக தான் என்பதை திமுக வும் அந்த கட்சியைச்சேர்ந்த மத்திய மந்திரிகளும் புரிந்துகொள்ள வேண்டும். பதவி சுகத்துக்கா க தமிழனை பலியிடும் பாவ செயலுக்கு திமுக. துணை போககூடாது.

இலங்கையில் தாக்குதலுக்கு உள்ளான தமிழர்கள மறு வாழ்வுக்கு இலங்கை அரசு தீர்வுகாணவில்லை. அதை தட்டி கேட்க மத்திய அரசு தயாரில்லை. ஆனால், இலங்கை ராணுவத்துக்கு போர்பயிற்சி அளிக்க முன்வந்தது வெட்கக்கேடு.

சிங்கள வீரர்களை உடனடியாக திருப்பி அனுப்பவேண்டும். சிங்கள வீரர்களுக்கு இந்தியாவின் எந்த பகுதியிலும் போர்பயிற்சி தர மாட்டோம் என மத்திய அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். அவ்வாறு உறுதியளிக்க தயார் இல்லா விட்டால் திமுக. மந்திரிகள் உடனே பதவிவிலக வேண்டும் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

Leave a Reply