பா.ஜ. க வுடன் இந்திய ஜனநாயக கட்சி கூட்டணி அமைக்கும்  மக்களவைத் தேர்தலில் பா.ஜ. க வுடன் இந்திய ஜனநாயக கட்சி கூட்டணி அமைக்கும் என அக்கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் பாரிவேந்தர் கூறியுள்ளார் .

இது குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :

இந்திய ஜனநாயக_கட்சி தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிறது . கட்சிதொடங்கி எட்டு மாதத்தில் 2011-ல் பொதுத் தேர்தலை எதிர் கொண்டு, 131 தொகுதிகளில் போட்டியிட்டோம்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க,வை ஆதரிக்க இருக்கிறோம் . அந்தகட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவோம். பா.ஜ.க.வுக்குதான் குடும்ப அரசியல் இல்லை. இது எங்கள்_கட்சி கொள்கையுடன் ஒத்திருக்கிறது .

பாரதிய ஜனதா ஆட்சியில் லஞ்சம் குறைவாகவே இருந்தது. தங்க நாற்கர சாலை போன்ற திட்டங்கள் பா.ஜ.க. ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டது . பாரதிய ஜனதா மதவாத கட்சி என சொல்கிறார்கள் . முதலில் நாம் அனைவரும் இந்தியர் எனும் நிலை வரும்போது மதவாதம் எனும் நிலை வராது என்றார் டாக்டர் பாரிவேந்தர் .

Tags:

Leave a Reply