கர்நாடகாவின்  புதிய  முதல்வர்  ஜெகதீஷ்   ஷெட்டர் கர்நாடகாவின் முதல்வர் பதவியிலிருந்து சதானந்த கவுடா ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய முதல்வராக ஜெகதீஷ் ஷெட்டரை நியமிப்பதற்கு முடிவு செய்திருப்பதாக பாரதிய ஜனதா தலைவர் நிதின் கத்காரி அறிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பதவியிலிருந்து சதானந்த கவுடா ராஜினாமாசெய்துள்ளார். அவரது ராஜினாமாவை பாரதிய ஜனதா ஏற்று கொண்டுள்ளது. கர்நாடகவின் புதிய முதல்வராக ஜெகதீஷ் ஷெட்டரை நியமிப்பதற்கு கட்சி முடிவுசெய்துள்ளது. கர்நாடகவில் சிறப்பான ஆட்சியை நடத்தி கட்சியின் பெயரை காப்பாற்றியவர் சதானந்தா என தெரிவித்தார் .

Leave a Reply