தற்போது நாடு சந்தித்துவரும் பொருளாதார மந்தநிலை மற்றும் அரசின் மோசமான செயல்பாடுகள் குறித்து சோனியா காந்தியும் பொறுப்பேற்க வேண்டும் என பாரதிய .ஜனதா தெரிவித்துள்ளது .

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான அரசு சந்தித்துவரும் திறமை யின்மை , லஞ்சம் , முன்னேற்றமின்மை போன்ற

பிரச்சினை_குறித்து எழுந்த குற்றச்சாட்டுக்கு நாட்டை ஆளும் கட்சியின்_தலைவர் எனும் முறையில் இதை தட்டி கழிக்க முடியாது என இது குறித்து இன்னும் தெளிவுபடுத்த விரும்புவதாக பாரதிய .ஜனதாவின் செய்தி தொடர்பாளர் ரவிஷங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

டைம் பத்திரிகையின் விமர்சனம் குறித்து , பதிலளித்த அவர் பிரதமர் மன்மோகன்சிங் குறித்து மிகதெளிவாக எழுதியுள்ளது . கடந்த சில ஆண்டுகளாக பிரதமர் மன்மோகன்சிங் மெச்சும்படியான எந்த வொரு சிறப்பான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை , இது ஒரு சாதாரண குடிமகனுக்கும் தெரியும், அவரது ஆட்சிகாலத்தில் நாடு பாதுகாப்பின்மை , நம்பிக்கையின்மை உள்ளிட்ட பல பிரச்சனைகளை சந்தித்து கொண்டிருக்கிறது என பிரசாத் குற்றம்சாட்டினார்.

இந்திய சுதந்திரம் வாங்கியதில் இருந்து அதிகம் லஞ்சம் தலை விரித்தாடும் ஆட்சி இந்த மன்மோகன்சிங் ஆட்சி தான் என பாரதிய ஜனதா கூறிவருவதையும் இங்கு ஞாபகபடுத்தினார்.

Leave a Reply