பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகம்செய்ய பாரத ரிசர்வ் வங்கி திட்டம்  கள்ளநோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகம்செய்ய பாரத ரிசர்வ் வங்கி திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொழில் நுட்ப ரீதியாக போலி பிளாஸ்டிக் நோட்டுகளை தயாரிப்பது

கடினம் என்பதால் காகித ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக பிளாஸ்டிக் நோட்டுகள் புழக்கத்திற்கு வரவுள்ளன.முன்னோடி திட்டமாக 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகள் தயாரிக்கப்பட்டு 5 நகரங்களில் பாரத ரிசர்வ் வங்கி மண்டல அலுவலங்கள் மூலமாக வெளியிடப்படும் என தெரிகிறது.

தேய்மானம் மற்றும் பிற காரணங்களால் மிககுறுகிய காலத்திலேயே, காகித நோட்டுக்களை மீண்டும் அச்சிட நேரிடுகிறது. மேலும், இவற்றை அச்சிடுவதற்கான செலவும் மிக அதிகம் என்று கூறப்படுகிறது. அதேசமயம், பிளாஸ்டிக் நோட்டுக்களின் ஆயுள் காலம் சராசரியாக ஐந்து ஆண்டுகளும் அதிகமாக உள்ளது. அச்சிடும் செலவும் குறைவாக இருக்கும்.

எதிர் காலத்தில் காகித நோட்டுகள் முற்றிலுமாக ஒழிந்து முழுக்க முழுக்க பிளாஸ்டிக் நோட்டுகளே ஆதிக்கம் செலுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply