நிதியமைச்சராக  இருந்து சாதிக்க முடியாதவர்  ஜனாதிபதியா  சங்மா மத்திய நிதியமைச்சர் பதவியில் இருந்து சாதிக்க முடியாத பிரணாப்பை , ஜனாதிபதி மாளிகையில் அமரவைத்து, அழகு பார்க்க காங்கிரஸ் விரும்புகிறது ,” என்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சங்மா கருத்துதெரிவித்துள்ளார் .

மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது ; பிரணாப் முகர்ஜி, மத்திய நிதியமைச்சர் பதவியில் இருந்து சாதிக்க முடியாமல் தோல்வியடைந்தவர். அவரை ஜனாதிபதி மாளிகையில் அமர்த்தி அழகுபார்க்க விரும்புகிறது காங்கிரஸ். இந்ததேர்தலில், போதிய ஆதரவு எனக்கு இல்லாதது போன்று தெரிந்தாலும், கண்டிப்பாக நான் வெற்றிபெறுவேன். அரசியலில் எப்போது வேண்டு மானாலும் மாயா ஜாலம் நடக்கலாம். அது எப்படிநடக்கும் என்பதை கூறமுடியாது. அது மிக ரகசியம்.

சிவசேனா கட்சி எம்எல்ஏ.,க்கள், எனக்கு ஆதரவு அளிக்கவேண்டும். அதேபோன்று , தேசியவாத காங்கிரஸ் கட்சியினரும் எனக்கு ஆதரவு தரவேண்டும் . தேசியவாத காங்கிரஸ் தலைமைக்கு என்னை பிடிக்காமல் போகலாம் ,ஆனால் அந்த கட்சியில் ஏராளமான நண்பர்கள் எனக்கு உண்டு . அவர்கள், தங்களின் மனசாட்சிப்படி எனக்கு வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன் என்றார் .

Leave a Reply