ஐக்கிய முற்போக்குக்  கூட்டணி  அரசு இதய சுத்தி இல்லாமல் நடந்து கொள்வது  மக்கள் ரூ 15 கொடுத்து தண்ணீர் பாட்டிலை வாங்கி குடிக்கும்போது , ஒரு கிலோ அரிசி அல்லது கோதுமையை ஏன் ஒரு_ரூபாய் அதிகம் தந்து வாங்க விரும்ப வில்லை என மத்திய உள் துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் கேள்விக்கு பா.ஜ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பா.ஜ க செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்ததாவது –

விலை உயர்வை பற்றி நடுத்தரமக்கள் எப்படி எடுத்து கொள்கிறார்கள் என்பது குறித்த சிதம்பரத்தின் கருத்து கண்டனத்துகுரியது , ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சாதாரண மக்களிடம் இதய சுத்தி இல்லாமல் நடந்துகொள்வது அதிர்ச்சி தருகிறது என கூறியுள்ளார்.

Leave a Reply