பாகிஸ்தான்  இந்துக்கள் மீது கொலை வெறிதாக்குதல் நடத்தபடுகிறது ; இந்து  எம்.பி.க் கள்பாகிஸ்தானில் சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்கள் மீது கொலை வெறிதாக்குதல் நடத்தபடுவதாக இந்து எம்.பி.க் கள் லால்சந்த், தர்ஷன்பன்ஷி, மான்வர்லால் போன்றோர் அந்நாட்டு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளனர் :-

பாகிஸ்தானின் தெற்கு சிந்துமாகாணத்தில் இருக்கும் மிர்புர் காஸ், ஷதாத் காட், மிர்புர் மதெலோ போன்ற இடங்களில் இந்துக்களின் மீது கொலைவெறி தாக்குதல்கள் நடத்தப்பட்டுகிறது . இந்துக்களின் வீடுகள் சூரையடபடுகின்றன . குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை_கொலை செய்யபடுகின்றனர்.

மிர்புர்மதெலோ என்ற இடத்தில் குல்கபகள்ஷா என்பவர் அவரது சொந்த வீட்டிலிருந்தே மிரட்டி அடித்து விரட்டப்பட்டார் என தெரிவித்தார் . பிரதான எதிர் கட்சியான பிஎம்எல்.கட்சியின் எம்.பி. கூறும் போது அந்த பகுதியில் இருக்கும் இந்துக்களின் வீடுகள் ஆக்கிரமிக்கபடுகின்றன. கட்டாயப் படுத்தி அவர்கள் வெளியேற்ற படுகின்றனர். அந்தநபர்கள் மீது இது வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்தார்.

Leave a Reply