ஐஎஸ்ஐயின் பெண் உளவாளி வலையில் சிக்கிய இந்திய ராணுவ லெப்டினட் பேஸ்புக் மூலம் பாகிஸ்தான் ஐஎஸ்ஐயின் பெண் உளவாளி வலையில் சிக்கியுள்ளார் இந்திய ராணுவ லெப்டினட் கலோனல் ஒருவர்.

இந்திய ராணுவ கவச படைப் பிரிவின் லெப்டினட் கலோனல் ஒருவர் அந்த பெண்ணுடன் பேஸ்புக்கில் தொடர்புகொண்டதை மத்திய உளவு

பிரிவான இன்டலிஜென்ஸ் பீரோ (IP) கண்டு பிடித்து பாதுகாப்பு அமைச்சகதை எச்சரித்த தகவல் வெளியாகியுள்ளது .

இதை தொடர்ந்து அந்தலெப்டினட் கலோனலிடம் ராணுவம் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .

உரிய அனுமதியின்றி ராணுவ அதிகாரிகள் வெளி நாட்டினர் யாருடனும் தொடர்புகொள்ள கூடாது என விதியிருந்தும் அதை அந்த லெப்டினட் கலோனல் மீறியுள்ளார் , மேலும் அவர் என்னென்ன தகவலைகளை பகிர்ந்துகொண்டார் என்பது குறித்து ராணுவ உளவுப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

Leave a Reply