மிகப் பெரிய தாக்குதல்களை மேற்கொள்ள லஷ்கர்-இ-தொய்பா திட்டமிட்ம் காஷ்மீரிலும் இந்தியாவின் முக்கிய பகுதிகளிலும் மிகப் பெரிய தாக்குதல்களை மேற்கொள்ள லஷ்கர்-இ-தொய்பா திட்டமிட்டுள்ளதாக அபு ஜிண்டாலின் வாக்குமூலத்தின் மூலம் தெரிய வருகிறது .

லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த அபு ஜிண்டாலிடம் காவல்துறையினர்

தீவிர விசாரணை செய்து வருகின்றனர், இதில் பல அதிர்ச்சியூட்டும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன : காஷ்மீரை சேர்ந்த லஷ்கர் கமாண்டர் அஸ்லம் காஷ்மீரி என்பவர் தான் ஜிண்டாலை அந்த அமைப்பிற்குள் கொண்டுவந்தார். இன்னொரு லஷ்கர் தீவிரவாதி ஃபயாஸ் காக்சியின் மூலமாக அவர் ஜிண்டாலை மகாராஷ்டிரத்தில்_கடந்த 2005-ல் சந்தித்தார்.

மும்பை தாக்குதலுக்கு முன்பும், பின்பும் ஜிண்டால், பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தங்கியிருக்கிறான் . அங்கிருக்கும் முஸôபராபாத்தில் லஷ்கர் அமைப்பின் காஷ்மீர் பிரிவு தலைமையுடன் நெருக்கமாயிருக்கிறான்,

அந்தநகரில் ஐக்கிய ஜிகாத் கவுன்சில் எனும் தீவிரவாத அமைப்பு செயல்பகிறது. தீவிரவாத அமைப்புகளை எல்லாம் ஒருங்கிணைக்கும் கூட்டமைப்பான இது, புதிய தீவிரவாத குழுக்களை காஷ்மீருக்குள் அனுப்பி வைக்க திட்ட மிட்டு வருகிறது. அங்கிருந்து நாட்டின் பலபகுதிகளுக்கும் தீவிரவாதிகள் அனுப்பி வைக்க படுவர் . அவர்கள் பல நகரங்களில் வழிபாட்டு தலங்களையும், மக்கள்நெரிசல் மிக்க பகுதிகளையும் குறி வைப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது

Leave a Reply