விவசாயிகளுக்கு தனியாக மத்திய பட்ஜெட் தாக்கல்செய்ய வேண்டும்; பிரபாத் ஜா விவசாயிகளுக்கு தனியாக மத்திய பட்ஜெட் தாக்கல்செய்ய வேண்டும் என ம.பி மாநில பாரதிய ஜனதா தலைவர் பிரபாத் ஜா வலியுறுத்யுள்ளர் .

மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது ; விவசாயத்துக்கு முக்கியத்துவம்_தருவதற்காக ம.பி. அரசு விவசாயிகள் கேபினட்டை அமைத்துள்ளது. அதை போன்று மத்திய அரசிலும் அமைக்கவேண்டும். மத்திய அரசு உரத்தின் விலையை மூன்று முறை உயர்த்தியுள்ளது . அதேபோன்று பூச்சி கொல்லிகளின் விலையை உயர்த்தியுள்ளது . இதைதவிர பெட்ரோல், டீசல் விலையையும் அதிகரிக்க பட்டுள்ளதால் விவசாயிகள் தவிக்கின்றனர்.

இதனால், நாடுமுழுவதும் விவசாயிகள் அவதிபடுகின்றனர் . அவர்கள் பல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது பிரச்னைகள்குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தினை கூட்டவேண்டும். ரயில்வே துறை போன்று , விவசாயிகளுக்கும் தனி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவேண்டும் என்றார்.

Tags:

Leave a Reply