சோம்பேறி அதிகாரிகளை சுட்டு தள்ளனுமாம்    ; ஆந்திர  அமைச்சர் வேலைசெய்யாத சோம்பேறி அதிகாரிகளை நடு ரோட்டில் வைத்து சுடவேண்டும் என ஆந்திர நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி.ஜி.வெங்கடேஷ் பேசியபேச்சு அதிகாரிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது.

கர்னூல் மாவட்டத்தில் சிறு பாசனத்துறை அலுவலகத்தை திறந்து வைத்து பேசிய அமைச்சர் டி.ஜி.வெங்கடேஷ்,”வேலைசெய்யாத சோம்பேறி அதிகாரிகளை ரோட்டில் நிறுத்தி சுட்டுதள்ள வேண்டும். குறிப்பாக ஐஏஎஸ். அதிகாரிகள் .ஒருவேலையும் செய்ய மாட்டார்கள். நாற்காலியை விட்டும் நகரமாட்டார்கள். ஏதோ அவர்கள் ஊழல் செய்யாத உத்தமர் போன்று போர்டு மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இது போன்ற அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்குவது கூட தண்டம் தான்” என பேசினார்

அமைச்சரின் இந்தபேச்சு ஆந்திர மாநில அரசு அதிகாரிகளின் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதெல்லாம் சரி ஊழல் செய்த அமைச்சர்களை என்ன செய்ய கொஞ்சம் சொன்னா உங்க கட்சிக்கு உதவும்

Leave a Reply