பஞ்சாப் இடைத் தேர்தலில் பாரதிய ஜனதா  அமோக வெற்றி பஞ்சாப்பின் தாசுயா சட்டசபை தொகுதிக்கான இடைத் தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றிபெற்றது. பஞ்சாப் மாநிலம், தாசுயா_சட்டசபை தொகுதி பாஜக ., – எம்எல்ஏ., அமர்ஜித்சிங் சகி காலமானதை தொடர்ந்து , கடந்த 11ம் தேதி இடை தேர்தல் நடந்தது. இதில், அவரது

மனைவி சுக்ஜித்கவுர் சகி பாஜக ., வேட்பாளராகவும், காங்கிரஸ் சார்பில் அருண் டோக்ராவும் போட்டியிட்டனர்.

இதில் பாஜக ., வேட்பாளர் சுக்ஜித்கவுர் சகி, 47,431 ஓட்டுகள் அதிகம்பெற்று வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. தேர்தலில் அவர்பெற்ற ஓட்டுகள் எண்ணிக்கை 77,494. அவரை எதிர்த்துபோட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அருண்டோக்ரா 30,063 ஓட்டுக்களை பெற்றார். இந்தவெற்றியின் மூலம் பஞ்சாப் மாநில சட்ட சபையில் பாஜக,வின் எண்ணிக்கை மீண்டும் 12 ஆனது.

Leave a Reply