அமர்நாத் யாத்ரீகர்களுக்கு முறையான வசதி செய்து கொடுக்காதது ஏன் ; உச்ச நீதிமன்றம் அமர்நாத் பனிலிங்கதரிசன யாத்திரை துவங்கியதிளிருந்து 17 நாட்களில், 67 யாத்ரீகர்கள் மரணம் அடைந்ததற்கு, உச்ச நீதிமன்றம் கடும்கண்டனம் தெரிவித்துள்ளது. யாத்ரீகர்களுக்கு முறையான மருத்துவவசதி மற்றும் இதரவசதிகளை செய்து கொடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளது

சென்ற வருடம் அமர்நாத் பனிலிங்க தரிசன யாத்திரையின்போது, 45 நாட்களில் 105 யாத்ரீகர்கள் இறந்தனர். ஆனால், இந்த_ஆண்டு யாத்திரை தொடங்கியது முதல் 17 நாட்களிலேயே, 67 யாத்ரீகர்கள்_இறந்துள்ளனர். . யாத்ரீகர்களுக்கு முறையான மருத்துவ வசதிகளை செய்து தராததே இதற்குகாரணம். வசதிகளை செய்துதராதது ஏன் என்பதற்கு, மத்திய அரசும், காஷ்மீர் மாநில_அரசும், அமர்நாத் குகைகோவில் வாரியமும் விளக்கம் தர வேண்டும். மேலும், மத்திய உள் துறை செயலர், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை செயலர், ஜம்மு – காஷ்மீர் மாநில தலைமைச்செயலர், அமர்நாத் குகைகோவில் வாரிய தலைவர் ஆகியோர், ஒருவாரத்தில் நீதிமன்றம் முன் ஆஜராகி, வழக்கத்திற்கு_மாறாக யாத்ரீகர்கள் இறப்புதொடர்பாக எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதில் தர வேண்டும்.

அரசியல்_சட்டத்தின் 21வது பிரிவு மற்றும் 19(1)வது பிரிவின்கீழ், யாத்ரீகர்கள் நாடுமுழுவதும் சுதந்திரமாகவும், கவுரவமாகவும், பயமின்றியும், பாதுகாப்பாகவும் பயணிக்க உரிமை உண்டு. இந்த உரிமையை உறுதிசெய்ய வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை.என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Leave a Reply