மம்தாவின் முடிவு ஏமாற்றம் தருகிறது  ;  நிர்மலா சீதாராமன் ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பது எனும் மம்தாவின் முடிவு ஏமாற்றம் தருவதாக பாரதிய ஜனதா கூறியுள்ளது. மேலும் எந்த சூழ்நிலை காரணமாக இந்தமுடிவை எடுத்தார் என கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து பாரதிய ஜனதா , செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் தெரிவித்ததாவது , பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பது எனும் திரிணமுல் காங்கிரசின் முடிவு ஏமாற்றம் தருகிறது . தேசிய பயங்கரவாத தடுப்பு மசோதா, நேரடி அன்னிய முதலீடு, பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்ட திட்டங்களை முதன்முதலில் அவர் எதிர்த்தார் என்று கூறினார். மக்களின் அக்கறை யிலிருந்து அவர் மாறுபடுகிறார். ஒருசில காரணங்களுக்காக அவர் தனதுமுடிவை மாற்றியுள்ளார் என்று கூறினார்.

Tags:

Leave a Reply