கே.ஏ. செங்கோட்டையன்  அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்தமிழக வருவாயத்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து கே.ஏ. செங்கோட்டையன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக நியமிக்கபட்டுள்ள தோப்பு வெங்கடசாலம் இன்று_காலை அமைச்சராக பொறுப்பேற்கிறார்.

தமிழக அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக இருந்தவர் கே.ஏ.செங்கோட்டையன். நேற்று மாலை இவர் திடீர் என அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் செங்கோட்டையனின் பதவிபறிப்புக்கு காரணமே அவரது மனைவியும் மகனும் தான் என கூறப்படுகிறது.

செங்கோட்டையனின் தனிப்பட்ட வாழ்க்கைதொடர்பாக அண்மையில் ஜெயலலிதாவை சந்தித்து இருவரும் புகார் தந்தனர் . இதைதொடர்ந்து செங்கோட்டையனை கூப்பிட்டு ஜெயலலிதா எச்சரித்துள்ளார் , இதையடுத்து அவர் சுதாரித்துக்கொண்டு சிறிது காலம் அமைதியாக தனதுவேலைகளை பார்த்து வந்தார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இடைதேர்தல் வாக்கு சேகரிப்புக்கு போன இடத்தில் புதிய உறவை ஏற்ப்படுத்தி கொண்டதாகவும். புதிய உறவுக்கு சென்னை தாம்பரத்தில் பெரியவீடு ஒன்றை வாங்கி தந்ததாகவும் இதனால் வெகுண்டெழுந்த குடும்பத்தார் மீண்டும் முதல்வரை சந்தித்து புகார் வாசிக்கவே .தற்போது செங்கோட்டையனிடமிருந்த அத்தனை பதவிகளையும் பறித்து விட்டார் என்கிறார்கள்

Leave a Reply