மத்திய அமைச்சரவை கூட்டத்தை சரத்பவார் புறக்கணித்தார்  இன்று மாலை பிரதமர் இல்லத்தில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் புறக்கணித்தார்.

பிரதமருக்கு அடுத்த_இடத்தில் இருந்த பிரணாப் முகர்ஜி, ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுவிட்டதால் , அந்த இடத்திற்கு தன்னை நியமிக்கவேண்டும் என சரத்பவார் எதிர்பார்த்தார்

கடந்த அமைச்சரவை கூட்டத்தின்போது பிரதமருக்கு அடுத்ததாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏகே.அந்தோணிக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. பவாருக்கு 3-வது இருக்கையே அளிக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த தேசியவாத காங்கிரஸ் மத்திய அமைச்சரவை கூட்டத்தை புறக்கணித்துள்ளது.

Leave a Reply