சமாஜ்வாடியினர் முதலில் தங்களுக்குள் கண்ணியதுடன் நடந்துகொள்ள வேண்டும் நாட்டில் சட்ட ஒழுங்கை கடைபிடிக்க சமாஜ்வாடி கட்சியினர் முதலில் தங்களுக்குள் கண்ணியதுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர் உமா பாரதி தெரிவித்துள்ளார் .

மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது ‘சமாஜ்வாடியினர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது மட்டும் அல்லாமல் அரசின் மாவட்ட நிர்வாகத்திலும் அவர்கள் தலையிடுகின்றனர்.கொலைக் குற்றங்கள் உள்ளிட்ட அனைத்து குற்றநடவடிக்கைகளில் ஈடுபட்டும் அவர்களின் மீது காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.

இஸ்லாமிய மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் தருவது வரவேற்கத்தக்கது. ஆனால் பிந்தங்கிய வகுப்பினரை புறக்கணிப்பதை விட்டுவிட்டு தலித் ,பிந்தங்கிய வகுப்பினருக்கும் ஸ்காலர்ஷிப் தரவேண்டும் . ஜாதி மத அடிப்படையில் தலித்களுக்கு எதிராகசெல்வது சட்டத்திற்கு புறம்பானது என்றார்.

Leave a Reply