முலாயம் சிங்கின் வாக்கு செல்லாது;  தேர்தல் ஆணையம்  குடியரசுத் தலைவர்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங்கின் ஓட்டை ரத்துசெய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு வாக்களித்த சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் முதலில் எதிர் கட்சி வேட்பாளர்

பி.ஏ.சங்மாவுக்கு வாக்களித்து விட்டார். பிறகு அதை கிழித்து போட்டு விட்டு வேறு ஒரு வாக்குச்சீட்டு வாங்கி பிரணாப்க்கு வாக்களித்தார்.

இத்தகவல் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. முலாயம்சிங் முதலில் போட்டதுதான் செல்லும் . அதனால் அவரதுவாக்கை எங்கள் கணக்கில் சேர்க்கவேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் . பி.ஏ.சங்மா தரப்பில் முறையீடு செய்யப்பட்டது . ஆனால் அப்படிசெய்ய முடியாது என கூறிய தேர்தல் ஆணையம் முலாயம் சிங் வாக்களித்ததே செல்லாது- என அறிவித்துவிட்டது.

Leave a Reply