பழங்குடியினத்தவர்  ஜனாதிபதியாக அடைய கிடைத்த வாய்ப்பை தேசம் இழந்துள்ளது ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜி வெற்றியை ஏற்றுகொள்வதாக தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் பி.ஏ.சங்மா தெரிவித்துள்ளார். மேலும் பிரணாப்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது , ”வெற்றி பெற்ற பிரணாப்பை வாழ்த்துகிறேன். நாட்டின் பழங்குடியின மக்களுக்கும், என்னை வேட்பாளராக_முன்னிறுத்திய பாரதீய ஜனதா, அதிமுக, உள்ளிட்ட கட்சிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தேர்தலில் நான்_தோற்றிருந்தாலும், பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவரை ஜனாதிபதியாக அடையகிடைத்த அரிய வாய்ப்பை நமது தேசம் இழந்துள்ளது. அரசியல்_பாகுபாடு மற்றும் பாரபட்சங்களால் தான் நான் தோற்றேன் என தெரிவித்துள்ளார் .

Leave a Reply