மும்பை தாக்குதல்  தீவிரவாதிகளுக்கு ஹிந்தி பயிற்சி தந்த அபு ஜிண்டால்  மும்பையில் 2008-ம் ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொள்வதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே அதை பற்றி தன்னிடம் தெரிவிக்கபட்டதாக லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி அபு ஜிண்டால் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து காவல்துறை வட்டாரம் தெரிவித்ததாவது : மும்பையில் 2008-ம் ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொள்வதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே லஷ்கர்-இ-தொய்பாவின் உயர் மட்ட தலைவர்கள் தாக்குதல் குறித்து அபு ஜிண்டாலிடம் தெரிவித்துள்ளனர் .

அவர்கள் ஒருகுழுவை உருவாக்கி ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட பணியை கொடுத்துள்ளனர். இதில், அபு ஜிண்டாலின் பணி , மும்பை தாக்குதல் மேற்கொள்ள இருந்த தீவிரவாதிகளுக்கு ஹிந்தி பயிற்சியை தருவதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply