வாரிசு அரசியல் இல்லாத, பாரதிய ஜனதாவுடன் கூட்டணி ; பாரிவேந்தர்  வாரிசு அரசியல் இல்லாத, பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து, அடுத்த பொதுத்தேர்தலை சந்திப்போம்,” என்று , இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத்தலைவர் பாரிவேந்தர், தெரிவித்துள்ளார் .

மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது மின்தடையை காரணம்

காட்டி, அதிமுக., ஆட்சிக்கு வந்தது. ஆனால் மின்பிரச்னை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது . இந்தபிரச்னையை, தி.மு.க., – அ.தி.மு.க., ஆகிய இரண்டு கட்சிகளாலும் தீர்க்க முடியாது ,

தமிழகத்தில், சட்ட ஒழுங்கு சீரழிந்து உள்ளது; எங்கு பார்த்தாலும்,கொள்ளை, கொலை, திருட்டு நடக்கிறது. திராவிட கட்சிகளுடனும் வாரிசு அரசியல்நடத்தும் காங்கிரசுடனும், கூட்டுசேர மாட்டோம். அரசியல் வாரிசு இல்லாத, பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து, அடுத்த பொதுத்தேர்தலை சந்திப்போம். என பாரிவேந்தர் தெரிவித்தார் .

Leave a Reply