ஒபாமா அரசில் மீண்டும் ஒரு இந்திய நிர்வாக அதிகாரி அமெரிக்க அதிபர் ஒபாமா தனது அரசில் புதியநிர்வாக அதிகாரிகளை நியமித்திருக்கிறார் . அதில் ஒருவர் ராணி ராமசாமி ,அமெரிக்க இந்தியரான இவருக்கு கலைகளுககான தேசிய கவுன்சிலின் முக்கிய உறுப்பினர் பதவி தரப்பட்டுள்ளது .

ராணி ராமசாமி ராகமாலா நடன அமைப்பை நிறுவி நடத்தி_வருகிறார். பரத நாட்டிய கலைஞரான இவர் நடனம் கற்றுக்கொடுப்பதோடு நடன இயக்குநராகவும் உள்ளார் .

மேலும் 2011ம் ஆண்டுக்கான சிறந்த கலைஞருக்கான விருதை பெற்ற பெருமைக்குரிய இவர் சென்னை பல்கலைக் கழகத்தில் இளங்கலை ( BA Fine Arts ) பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply