சுங்க சாவடிக்கு  பொதுமக்கள் யாரும் கட்டணம் செலுத்தவேண்டாம் மகாராஷ்டிராவில், சுங்க சாவடி கட்டண வசூலில் வெளிப்படையான அணுகு முறையை, மாநில அரசு மேற்கொள்ளும்வரை, பொதுமக்கள் யாரும் கட்டணம் செலுத்தவேண்டாம்,” என்று , நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார் .

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; மகாராஷ்டிராவில் இருக்கும் சுங்கச்சாவடிகளில், கட்டணம் வசூலில் வெளிப்படை தன்மை இல்லை. சுங்க சாவடிகளில் கட்டணம் எவ்வளவு வசூலிக்கபடுகிறது என்பது குறித்து மாநில அரசு தெரிவிக்கவேண்டும்.

நான் சுங்கச்சாவடிக்கு எதிரானவன் அல்ல. ஆனால், கட்டணம்செலுத்தும் மக்களுக்கு, அதற்காக மாநில அரசு என்ன வசதிகளை செய்துகொடுக்கிறது என்பதை, அறிந்துகொள்ள விரும்புகிறேன். மாநிலத்தில் சுங்கச்சாவடி உள்ள எல்லா இடத்திலும் எங்கள் கட்சித்தொண்டர்களை நிறுத்த போகிறோம். சுங்க சாவடி கட்டணத்தை செலுத்த வேண்டும் என பொது மக்களை கட்டாய படுத்தினால் எங்கள் தொண்டர்கள், அதைதடுத்து நிறுத்துவர் என தெரிவித்துள்ளார்

Leave a Reply