குஜராத்தில் முஸ்லீம்களின் நிலைபோன்ற உணர்வு பூர்வமான விஷயங்கள் குறித்து குஜராத் முதல்வர் நரேந்திரமோடி முதல் முறையாக வாரஇதழுக்கு மனம் திறந்து கருத்து தெரிவித்தார் .

பிரபல உருது வார இதழுக்கு அவர் தந்த பேட்டியில் தெரிவித்ததாவது , நான் கோத்ரா கலவரத்தை வேடிக்கை பார்த்ததாக, என்னை குற்றம் சுமத்தினார்கள் . ஆனால், அதில் உண்மை இல்லை என இப்போது நிரூபணமாகி வருகிறது. நான் குற்றவாளி என்று நிரூபிக்கபட்டால், என்னை தூக்கில் போடுங்கள் என்றார்.

அத்துடன் தன்மீது எந்த குற்றமும் இல்லை என்று நிரூபிக்கபட்டால் தனது நற்பெயருக்கு_கலங்கம் ஏற்படுத்திய ஊடகங்கள் அனைத்து தன்னிடம் மன்னிப்பு கோரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கோத்ரா ரயில் எரிப்பு_சம்பவம் தொடர்பாக நடந்த கலவரத்தை மையகாககொண்ட இந்த பேட்டிக்கு மோடி ஒப்புக்கொள்வார் என்றோ, அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் தருவார் என்றோ எதிர்பார்க்க வில்லை என உருதுவார இதழின் ஆசிரியர் சித்திக் தெரிவித்துள்ளார், மடியில் கணம் இருந்தால் தானே பயம்கொள்ள வேண்டும்

Leave a Reply