இந்து மாணவ, மாணவிகளுக்கும் கல்வி உதவி தொகை வழங்ககோரி, மாநில பாரதிய ஜனதா தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் நாகர் கோவிலில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார்.
சிறுபான்மை பிரிவைசேர்ந்த கிறிஸ்தவ , முஸ்லிம் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவித்தொகையை மத்திய அரசு வழங்கி வருகிறது.
பொருளாதார அடிப்படையில் பின்தங்கி யிருக்கும் இந்து மாணவ, மாணவிகளுக்கும் கல்வி உதவி தொகை வழங்கவேண்டும் என்று பாரதிய ஜனதா கோரிக்கைவிடுத்து வருகிறது. இதற்காக பல கட்ட போராட்டங்களை நடத்திவருகிறது .
நேற்று, கன்னியா குமரி மாவட்ட பாரதிய ஜனதா சார்பில், நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன்பு இந்தகோரிக்கையை வலியுறுத்தி உண்ணா விரதம் நடை பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், “”அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கல்வி உதவித்தொகை கிடைக்கும்வரை பாரதிய ஜனதா போராடும்,” என்றார்.
உண்ணா விரதத்திற்கு நாகர்கோவில் நகராட்சி தலைவி மீனாதேவ், மாவட்ட தலைவர் தர்மராஜ், நகரதலைவர் ராஜன், போன்றோர் கலந்து கொண்டனர்.