உகாண்டாவில் மிக பயங்கரமான ஆட்கொல்லி வைரஸான எபோலா மிக வேகமாக பரவி வருகிறது இந்த வைரஸ் தாக்கியதில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதைதொடர்ந்து பொதுமக்கள் யாரோடும் கைகுலுக்க வேண்டும், மனைவியுடன்உறவு கூட வைத்துக்கொள்ள வேண்டாம் என அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளாது.

உகாண்டா எபோலா வைரஸுக்கு மருத்துவத்தின் மூலம் குணப்படுத்துவது என்பது மிகவும் கடினமாக உள்ளது . இதனால் இந்தவைரஸ் பரவிவிடாமல் இருக்க பொது மக்கள் தான் தம்மை தற்காத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக ஒருவருக் கொருவர் கைகுலுக்குவதன் மூலமாகவோ உடல் உறவு வைத்துகொள்வதன் மூலமாகவோ இந்த வைரஸ் வேகமாக பரவிவருவதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

உகாண்டா தலைநகர் கம்ப்லாவிலிருந்து 170 கிமீ தொலைவில் இருக்கும் கிப்பாலே மாவட்டத்தில் தான் 1976ஆம் வருடம் எபோலா ஆற்றிலிருந்து இந்த வைரஸ் முதன்முதலாக பரவியது. அதன் பிறகு 2000 ம் வருடத்திலிருந்து இது வரை 200க்கும் அதிகமானோரை எபோலா வைரஸ் காவு வாங்கியிருந்தது.

தற்போது மீண்டும் எபோலா பரவிவருக்கிறது. இந்தமாவட்டத்தில் மட்டும் 80 ஆயிரம்பேர் எபோலாவினால் பாதிக்கபப்ட கூடிய அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply