தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) தலைவர் ஸ்ரீ எல். கே. அத்வானி அவர்கள், ஜூலை 31, 2012 அன்று கௌஹாத்தியில் நடந்த பத்திரிக்கையாளர் கூட்டத்தில் வெளியிட்ட அறிக்கை

பெருமளவு வங்கதேசத்தினர் ஊடுருவலில் காங்கிரஸின் கூட்டுச் சதிதான் அசாமில் தொடர்ந்து கொண்டிருக்கும் வன்முறைகளுக்கு அடிப்படைக் காரணம்.

நான்கு அம்சத் தீர்மானம் மீது நாடு முழுவதும் கருத்தொற்றுமை ஏற்படுவதற்கு அனைத்துக் கட்சிகளிடமும் வேண்டுகோள்

  • அசாம் பிரச்சினையை இந்து முஸ்லீம் பிரச்சினையாகப் பார்க்காமல் இந்தியர்களுக்கும் வெளிநாட்டவர்களுக்குமான பிரச்சினையாகப் பார்க்க வேண்டும்.
  • அசாமில் வாக்காளர் பட்டியலில் இருந்து குடிமக்கள் அல்லாதோர் பெயர்களை நீக்குவதன் மூலம் புதுப்பிக்கப்பட்ட குடிமக்களின் தேசியப் பதிவேட்டை தயார் செய்ய வேண்டும்.
  • போடோ பகுதிகளில் பழங்குடியினர் வாழும் இடங்களில் ஊடுருவல் இல்லாமல் பாதுகாத்தல் வடகிழக்கில் இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கு அசாமைப் பாதுகாத்தல்.

கோக்ராஜ்ஹர் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட அசாமின் போடோ பகுதிகளை நான் பார்வையிட்டேன். சமீபத்திய வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நான் வருத்தப்படுகிறேன். வன்முறை சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் வீடிழந்த பெருமளவு மக்களுக்கும் என்னுடயை இதயபூர்வமான இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். போடோக்களுக்கான மற்றும் போடோ அல்லாதவர்ளுக்கான நிவாரண முகாம் இரண்டையும் நான் பார்வையிட்டேன்.

ஜூலை 28 அன்று அசாமுக்கு வருகை புரிந்த பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள், அசாமை உலுக்கிய கலவரங்கள் இந்தியாவுக்கே களங்கம் என்ற கூறினார், நானும் இதை முழு மனதோடு ஒப்புக்கொள்கிறேன். குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் நானும் அவருடன் ஒத்துப்போகிறேன்.

இருப்பினும், உண்மையில் குற்றம் எங்கு இருக்கிறது என்பது பற்றி சிந்திக்குமாறு பிரதமர், காங்கிரஸ் தலைவர் மற்றும் அசாம் முதல்வர் ஆகியோரை நான் வலியுறுத்துகிறேன். முதலாவதாக, உடனடியாக மோதல் நிகழ்வதற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரிந்தபோதிலும் கோக்ராஜ்ஹர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலமை மோசமடைந்ததபோது காலதாமதமாகச் செயலாற்றியது மாநிலத்திலுள்ள காங்கிரஸ் அரசின் குற்றமல்லவா? இரண்டாவதாக, போடோ பகுதிகள் உட்பட இந்தியாவுக்குகள் வங்கதேசத்தினர் பெருமளவு ஊடுருவல் என்ற அடிப்படைக் காரணத்தின்மீது வேண்டுமென்றே தொடர்ந்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மற்றும் மாநில காங்கிரஸ் அரசும் குற்றவாளிகள் இல்லையா?

இரண்டு கேள்விகளுக்குமான பதில் ஆம் என்பதே.

எனவே, அசாமில் பின்வரும் மூன்று தீவிரமான பிரச்சினைகளை ஏற்படுத்திய, வங்கதேசத்தினரின் பெருமளவிலான சட்டத்துக்கு புறம்பான குடியேற்றத்தில் அதனுடைய சதிக்காக காங்கிரஸ் தண்டிக்கப்பட வேண்டியது பொருத்தமானதே:

(அ) நிலப் பிரச்சினை; உள்ளூர் அசாம் மக்கள் தங்களுடைய வழிபாட்டுத்தலங்களின் நிலம், வன நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள் மற்றும் பழங்குடியினர் நிலங்கள் ஆகியவற்றின் மீதான கட்டுப்பாட்டை இழந்துவருகின்றனர், அதே நேரத்தில் வங்கதேசத்தினர் பெருமளவில் நிலத்தைக் கைப்பற்றத் தொடங்கியுள்ளனர்;

(ஆ) இனப் பிரச்சினை; தங்கள் சொந்த நிலத்திலேயே அவர்கள் ஒதுக்கப்பட்டுவிடுவோம் என்று அஞ்சுகிறார்கள்;

(இ) அசாமின் மக்கள் தொகை விவரப் பிரச்சினை: வெளியிலிருந்த குடியேறியவர்களால் தாங்கள் நெருக்கிப் பிழியப்பட்டு உரிமையற்றவர்கள் ஆக்கப்படுவதாக அசாமின் உள்ளூர் மக்கள் உணர்கிறார்கள்.

இந்த மூன்று பிரச்சினைகளின் கூட்டு விளைவு இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாகும். எல்லாவற்றுக்கும் மேலாக, IMDT சட்டத்தை "அரசியலமைப்புக்கு எதிரானது" என்று அதை அகற்றிய உச்ச நீதிமன்றத்தின் ஜூலை 2005 தீர்ப்பில், வங்கதேசத்திலிருந்து பெருமளவில் ஏற்படும் ஊடுருவல் அசாமின் மீது "அன்னிய ஆதிக்கத்தை" ஏற்படுத்தியுள்ளது என எச்சரித்திருந்தது. வங்கதேசத்தினரின் ஊடுருவலை நிறுத்துவதற்கான திறம்மிக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியிருந்தது. நீதிமன்ற வழிகாட்டுதலை மதிக்கும் வகையில் கடந்த ஏழு ஆண்டுகளில் ஐமுகூ அரசு எதுவும் செய்யவில்லை. இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை பற்றிய காங்கிரஸின் கவலையை அதனுடைய வாக்கு வங்கி அரசியல் வெற்றி கண்டுவிட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஜூலை 28, 2012 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸில் இந்திய தேர்தல் ஆணையர் திரு. ஹெச்.எஸ். பிரம்மா அவர்கள் கூறியுள்ள சில கருத்துகளை இங்கு குறிப்பிட நான் விரும்புகிறேன்.

"அசாமின் கீழ்ப் பகுதியில் போடோலேண்ட் டெரிடோரியல் அட்டானமஸ் டிஸ்ட்ரிக்டில் (BTAD) ஹிந்துக்களான போடோக்களுக்கும் அங்கு குடியேறிய முஸ்லிம்களுக்கும் இடையில் நிகழ்ந்த இன மோதல்கள் துரதிஷ்டவசமானவை, இருப்பினும் இந்த மோதல்கள் முழுவதுமாக எதிர்பார்க்கப்படாதவை அல்ல. பொதுவாகக் கேட்கப்படும் கேள்வி என்னவென்றால்: முதலில் இது நடப்பதற்கு ஏன் சில பத்தாண்டுகள் ஆனது? எந்த நேரத்திலும் வெடிக்கக்கூடிய நிலையில் அசாம் இருக்கிறது. ..மத ரீதியிலான 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அதிகாரிகளால் அறிவிக்கப்படும்போது, அசாமில் உள்ள 27 மாவட்டங்களில் 11 முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டமாக இருக்கப் போகிறது என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள் …. சட்டத்துக்குப் புறம்பாகக் குடியேறிவர்களாலும், உள்ளூர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் அல்லாதவர்களாலும் அரசு நிலங்கள் அமைப்பு ரீதியாகக் கைப்பற்றப்படுவது மற்றும் அடர்த்தி குறைந்த வனப்பகுதிகள் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்படுவதும் உள்ளூர் சமூகத்தினரிடையே தீவிரமான முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது…இந்தப் பிரச்சினைக்கு இந்திய தேர்தல் ஆணையமும் விலக்கல்ல. அது டி-வோட்டர்ஸ் (சந்தேகத்துக்கிடமான வாக்காளர்கள்) பிரச்சினையை சமாளிக்க வேண்டியுள்ளது… இந்த அமைப்புகளால் சட்டத்துக்குப் புறம்பாகக் குடியேறியவர்கள் என அடையாளம் காணப்படுவோர் வெளியேற்றப்பட வேண்டும். நாட்டிற்குள் சட்டத்துக்குப் புறம்பாகக் குடியேறுதல் என்ற இந்த அடிப்படை பிரச்சினை தீர்க்கப்படாதவரை, அவ்வப்போது வெவ்வேறு இடத்தில் பிரச்சினைகள் நிகழத்தான் செய்யும்."

அசாம் எதிர்கொண்டுள்ள பிரச்சினை ஹிந்து முஸ்லீம் பிரச்சினை அல்ல என்பதை பிஜேபி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக நான் தெள்ளதெளிவாக குறிப்பிட விரும்புகிறேன். மாறாக இது தெளிவாக இந்தியர்களுக்கும் வெளிநாட்டவர்களுக்குமான மோதல். அசாமிலுள்ள இந்திய முஸ்லீம்களுக்கும் இந்தியாவின் பிற பகுதிகளில் ஊடுருவியுள்ள வெளிநாட்டவர்களுக்கும் இடையே வேறுபாடு காணப்பட வேண்டும் என நாங்கள் நம்புகிறோம். சட்டத்துக்குப் புறம்பாகக் குடியேறியவர்கள், ஹிந்துவோ அல்லது முஸ்லீமோ, பழங்குடியினரோ அல்லது பழங்குடியினர் அல்லாதவரோ இந்தியர்களைப் போல அதே உரிமையையும் பாதுகாப்பையும் கோர முடியாது.

அசாம் தொடர்ந்து சந்தித்துவரும் பிரச்சினைகளுக்கு நீடித்த மற்றும் பலன் மிகுந்த தீர்வைக் காண வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தப் பிரச்சினை பெருமளவுக்கு வன்முறையாக வெளிப்படுகிறது. இதற்கான தீர்வு என்னுடைய பார்வையில் தீர்வு நான்கு அம்சங்களைக் கொண்டுள்ளது:

  • அசாம் பிரச்சினையை இந்து முஸ்லீம் பிரச்சினையாகப் பார்க்காமல் இந்தியர்களுக்கும் வெளிநாட்டவர்களுக்குமான பிரச்சினையாகப் பார்த்தல்
  • அசாமில் வாக்காளர் பட்டியலில் இருந்து குடிமக்கள் அல்லாதோர் பெயர்களை நீக்குவதன் மூலம் புதுப்பிக்கப்பட்ட குடிமக்களின் தேசியப் பதிவேட்டைத் தயார் செய்தல்.
  • போடோ பகுதிகளில் பழங்குடியினர் வாழும் இடங்களில் ஊடுருவல் இல்லாமல் பார்த்துக்கொள்ளுதல்.
  • வடகிழக்கில் இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கு அசாமைப் பாதுகாத்தல்.

மேலே குறிப்பிட்ட நான்கு அம்சத் தீர்மானத்திற்கு தேசம் முழுவதும் ஒருமித்த கருத்தை எட்டுவது இன்றியமையாதது என்பதை உணருமாறு மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள அரசுகளையும், அனைத்து அரசியல் கட்சிகளையும் நான் வேண்டிக்கொள்கிறேன்.

நன்றி எல். கே. அத்வானி

புது டெல்லி

Leave a Reply