புனே நகரில் நேற்று நான்கு இடங்களில் தொடர்சியாக குண்டுகள் வெடித்தன. இதில் உயிரிழப்பு ஏதுமில்லை இருப்பினும் இரண்டு பேர் படு காயமடைந்தனர். புனேயில் வெடிக்க வைக்கப்பட்டவை சக்தி வாய்ந்த வெடி குண்டுகள் இல்லை என்றாலும் நாட்டையே பெரும்பீதியில் ஆழ்த்தியுள்ளது.

குண்டுகள் வெடித்த நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்த பயங்கரவாத தடுப்பு படையினர் சம்பவ இடங்களை ஆராய்ந்த போது திடுக்கிட்டுப் போயினர். 4 குண்டுகளுமே “கேக்குகளை தயாரித்து அதில் கிரீம் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் ஒருவகையான கெமிக்கலைத் தடவி வைத்திருக்கின்றனர். கேக்குகளுக்கு நடுவே பால்பேரிங்குகள் நிரப்பப்பட்ட வெடிகுண்டை மறைத்து வைத்திருந்திருக்கின்றனர். சம்பவ இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்த மாதிரிகள் அனைத்தும் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

கேக்குகளை ஒரு பாக்ஸில் அடைத்து வைத்து இலக்கு வைக்கப்பட்ட இடங்களில் வைத்திருக்கின்றனர். பின்னர் ரிமோட் கண்ட்ரோல் மூலம் கேக் பாக்ஸை திறந்து கேக் வடிவத்துக்குள் இருக்கும் வெடிகுண்டை வெடிக்க வைத்துள்ளனர் என்றும் பயங்கரவாத தடுப்புப் போலீசார் கூறியுள்ளனர்.

Leave a Reply