தீவிரவாத விஷயத்தில் சகிப்பு தன்மைக்கே இடமில்லை; நரேந்திர மோடி தீவிரவாத விஷயத்தில், சகிப்பு தன்மைக்கே இடமில்லை எனும் கொள்கையை மத்திய அரசு பின்பற்றவேண்டும். என்று மத்திய அரசை, குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது : புனேயில் அடுத்தடுத்து 4 இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களைக் காணும்போது, நாட்டில் தீவிரவாதிகள் இன்னும் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருப்பது தெளிவாகிறது. இதுபோன்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் மீண்டும் நிகழாமல்தடுக்க வேண்டியது அவசியம். அதற்கு மிக கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். தீவிர வாத விஷயத்தில், சகிப்பு தன்மைக்கே இடம் இல்லைஎனும் கொள்கையை மத்திய அரசு பின்பற்றவேண்டும் என கேட்டுகொடுள்ளார்

Leave a Reply