பரிசுப் பொருட்களை அள்ளிச் சென்ற  பிரதிபா   முன்னாள் இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், தன் பதவி காலத்தில் பெற்ற விலை மதிப்பில்லா பரிசுப்பொருட்களை எல்லாம், அவர் தனது சொந்த ஊரான அமராவதிக்கு எடுத்துச்சென்று விட்டதாக சர்ச்சை கிளம்பியுள்ளது .

ஜனாதிபதி பதவி வகிப்பவர்கள், தங்களின் பதவிக்காலத்தில் ஏராளமான பரிசுப்பொருட்களை பெறுவது வழக்கம். ஆனால், பதவி காலம் முடியும்போது, அவற்றை எல்லாம் தங்கள் வீட்டிற்கு அவர்கள் எடுத்து செல்லவதில்லை . ஆனால், சென்ற மாதம் ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பிரதிபா பாட்டீலோ, தன் பதவிக்காலத்தில் பெற்ற, விலை மதிப்புமிக்க பரிசுப்பொருட்களை எல்லாம், தனது சொந்த ஊருக்கு எடுத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

பரிசுப் பொருட்கள் அனைத்தும் அரசின் சொத்து பிரதிபாவின் செயல், மரபுகளை மீறியதாகும் . இவர் ஜனாதிபதி மாளிகையை காலி செய்யும் போது 43 லாரிகளில் நான்கு ஊர்களில் உள்ள அவரது வீடுகளுக்கு பொருட்களை அள்ளி சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன ,

Tags:

Leave a Reply