மதுரையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ஜமால் மற்றும் உமர் பரூக் ஆகியோருக்கு பார்சல் மூலம் இரண்டு வெடிகுண்டுகள் அனுப்பப்பட்டுள்ள_சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை தெற்குகிருஷ்ணன் கோவில் தெருவில் ரியல்_எஸ்டேட்
தொழில் நடத்தி வரும் ஜமால் மற்றும் உமர் பரூக்க்கு பார்சல் ஒன்று வந்துள்ளது. ஜமால் தனக்குவந்த பார்சலை பிரித்துபார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பார்சலில் இரண்டு டைம்பாம்கள் 12.30 மணிக்கு வெடிக்கும்படி செட் செய்யப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து ஜமால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தர். வெடி குண்டு நிபுணர்கள் உடனடியாக_விரைந்து வந்து அந்த 2 வெடி குண்டுகளையும் 11.30 மணியளவில் செயல்இழக்க செய்தனர். மேலும் இது குறித்து ஜமால், உமர் பரூக் மற்றும் இவர்கள அலுவலகத்தில் வேலைபார்த்த முகமது இஸ்மாயில் ஆகியோரை காவல்துறையினர் அழைத்துசென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை விரகனூர் சுற்று சாலை அருகே சவுராஷ்டிரா மாநாடு இன்று நடை பெறுகிறது. இதில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கலந்து கொள்ள இருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது பிறகு ரத்து செய்யப்பட்டுது. ஒருவேளை இந்தவெடிகுண்டு பார்சல் மோடிக்கு வைக்க அனுப்பப்பட்டதா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும் காவல்துறை நடத்திய விசாரணையில் முகமது பரூக் தடைசெய்யப்பட்ட அல்-உமா இயக்க ஆதரவாளர் எனவும் , அத்வானி மதுரை வந்த போது, குண்டு வெடிப்பு தொடர்பாக இவரிடம் முன்பே ஒருமுறை விசாரணை நடத்த பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.