காங்கிரஸ்க்கு மாற்று பாரதிய ஜனதா  தான் ;  நிதின் கட்காரி காங்கிரஸ்க்கு மாற்று பாரதிய ஜனதா தான், இதில், அன்னா ஹசாரே தொடங்க போகும் கட்சியை எப்படி நினைக்கமுடியும். அவர் அரசியல்வாதியல்ல,சமூக சேவகர்தான் என்று பாரதிய ஜனதா தேசிய தலைவர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார் .

அவர் மேலும் தெரிவித்ததாவது வரும் 2014ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில், பிரதமர் வேட்பாளர் ‌நரேந்திர மோடிதான் என்பதை பாரதிய ஜனதா இன்னும் முடிவுசெய்யவில்லை. நேர காலம் வரும்போது இது குறித்து எங்கள் கூட்டணி கட்சியை ஆலோசித்த பிறகே முடிவுசெய்வோம்.

அரசியல் கட்சியை அன்னா ஹசாரே தொடங்குவது அவரது உரிமை , ஊழலுக்கு எதிரான அவரது போராட்டத்திற்கு பாரதிய ஜனதா தொடர்ந்து ஆதரவு தந்தது . ஆனாலும், பாரதிய ஜனதாவிற்கு மாற்று ஹசாரே கட்சி என சொல்ல முடியாது. தற்போது அவர் அரசியல்வாயல்ல, சமூக சேவகர், காங்கிரஸ்க்கு சரியான மாற்று பா.ஜ.க தான் .என்று நிதின்கட்காரி தெரிவித்தார்

Leave a Reply