பணம் இல்லாமல் ஹசாரே குழு எப்படி தேர்தலில் நிற்க போகிறது;  பால்தாக்கரே  ஹசாரே குழுவின் அரசியல் பிரவேஷம் குறித்து , சிவசேனை கட்சியின் தலைவர் பால்தாக்கரே கடும்கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது ; அரசியல் பற்றி சிலஅறிவாளிகள் கூறும் போது, போக்கிரிகளின் புகலிடம்

என்கிறார்கள். இதற்குள் ஹசாரேவும் வந்திருப்பது வரவேற்கத்தக்கதே . ஆனால், இந்தமாற்றம் எப்படி உருவானது என்பது தெரியவில்லை.

சமீபத்தில் ஹசாரே உண்ணா விரதம் இருந்த போது அங்கு கூடியிருந்தவர்கள் ஹசாரே குழுவினரிடம் இருந்து ஏதாவது நல்லசெய்தி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்ததை காணமுடிந்தது. ஊழலுக்கு எதிராக உண்ணா விரதம் மட்டுமே இருந்து எதுவும் சாதிக்கமுடியாது என்று ஹசாரே குழு உணர்ந்து, தேர்தல் வழி முறைகளை ஏற்றுக்கொண்டது நல்ல விஷயம்.
தேர்தலின் போது கறுப்புபணம் புழங்கு வதை தடுக்காதவரை ஊழலை முடிவுக்கு கொண்டு வர முடியாது . நம் நாட்டில் பெரியதொழில் நிறுவனங்கள் அரசியலை வழி நடத்தி செல்கின்றன. பெரியளவில் அங்கு பணம் முதலீடு செய்ய படுகிறது. யாரும் பணம் இல்லாமல் தேர்தலில் நின்று விட முடியாது.

மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத் பவார் கூறியது போன்று , ஹசாரே குழு பணம் இல்லாமல் தேர்தலிலும், அதற்காக நாடுமுழுவதும் எப்படி பிரசாரம் செய்ய போகிறது என்பதை விளக்கவேண்டும். இதற்கு ஹசாரேகுழு பதிலளிக்க வேண்டும் என்று பால் தாக்கரே கூறியுள்ளார்.

Leave a Reply