வங்கதேச  எல்லையை மூடவேண்டும்;  நிதின்  கட்காரி அசாமில் சமீபத்தில் நடந்த வன் முறைக்கு, 70க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். சட்டவிரோதமாக ஊடுருவியவர்களே இந்த வன் முறைக்கு காரணம் எனவே, வங்கதேச எல்லையை மூடவேண்டும் என பா.ஜ.க தலைவர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து நிதின் கட்காரி தெரிவித்ததாவது , அசாம் வன்முறை சம்பவத்தில் சிக்கி 70க்கும் அதிகமானோர் பலியாயினர். இந்த வன்முறைக்கு, சட்டவிரோத ஊடுருவளே காரணம் என தெரியவருகிறது . வங்கதேசத்திலிருந்து பெரும்பாலோனோர், இந்தியாவிற்கு சட்ட விரோதமாக ஊடுருவி வருகின்றனர் , இவர்கள், நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சறுத்தலாக உள்ளனர். எனவே வங்கதேச_எல்லையை மூடும் நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஈடுபடவேண்டும்

ஓட்டு வங்கிக்காக, சட்ட விரோத‌ ஊடுருவ‌லை காங்கிரஸ் கட்சி ஆதரித்து வருகிறது சட்ட விரோதமாக குடியேறியவர்களுடன் காங்கிரஸ் ஒப்பந்தம் செய்துகொண்டு, அசாமில் பெரும் வன்முறை நிகழ காரணமாக உள்ளது என குற்றம் சாடியுள்ளார்.

ஓர் இலக்கியவாதியின் ஆன்மிக அனுபவம்

Tags:

Leave a Reply