கறுப்பு பணத்துக்கு எதிராக யோகாகுரு பாபா ராம் தேவ்  உண்ணா விரதம்  கறுப்பு பணத்துக்கு எதிராக யோகாகுரு பாபா ராம் தேவ் நாளை டில்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணா விரதம் இருக்கபோகிறார்.

இது குறித்து ஆமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராம் தேவ், வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டு உள்ள கறுப்பு பணத்தை

மீட்டு ‌இந்தியாவுக்குள் கொண்டுவர மத்திய அரசு தவறி விட்டது. வறுமையினால் பதிக்க பட்ட மக்களை இந்த அரசு சுத்தமாக கண்டு கொள்வதே இல்லை . வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்பு பணத்தை கொண்டு வரப்படுமேயானால், அத்தியாவசிய பொருட்களின் மீதான வரியை கணிசமாக குறைக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்

Leave a Reply