அசாம் மாநிலத்தில் சட்ட விரோத குடியேற்றத்திற்கு அரசு அனுமதி தந்துள்ளதே , கலவரத்திற்கு முக்கிய காரணம் என்று பா.ஜ.க மூத்த தலைவர் அருண் ஜெட்லி கருத்து தெரிவித்துள்ளார்
இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது; நாட்டின் வட கிழக்கு
பகுதிகள் தேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது . நாட்டின் மற்றபகுதிகளிலிருந்து இந்த மாநிலங்களுக்கு குறுகலான தொடர்பே உள்ளது. இதற்க்கு இயற்கை மாற்றங்களும் காரணமாக இருந்தாலும் , நாட்டின்_பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டியது மத்திய அரசின்கடமை.
அசாம் கலவரத்தை அரசியலிற்கு அப்பாற்பட்டு அணுக வேண்டும் மற்ற எந்த வொரு குற்றத்துடனும் ஒப்பிடமுடியாது. மத்திய அரசு, இதற்க்கான தீர்வை உடனே கண்டறிந்து செயல்படுத்தவேண்டும். அசாமில் சட்ட விரோதமாக குடியேற்றத்திற்கு அரசு அனுமதி தந்துள்ளதே, கலவரத்திற்கு காரணம், ஓட்டு வங்கியை கருத்தில்கொண்டு சட்ட விரோத குடியேற்றம் அனுமதிக்க படுகிறது என்று அவர் கூறினார்